கடந்த வாரம் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில்படுகாயம் அடைந்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்த ஆஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூசின் இறுதி சடங்குகள் இன்று ஆயிரக்கணக்கான, ரசி்கர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே நடைபெற்றது. இதில் நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ள இந்த இறுதிச் சடங்கில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அடோட்டும் கலந்து கொண்டு தன்னுடைய இறுதி அஞ்சலியை செலுத்தினார். இந்திய கிரிக்கெட் அணி சார்பில் வீராத் கொஹ்லி, ரோஹித் சர்மா மற்றும் ரவிசாஸ்திரி ஆகியோர் பிலிப் ஹியூஸுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சார்பில் கலந்து கொண்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர் லாரா, இந்த சம்பவம் குறித்து கருத்து கூறியபோது, “இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் பேரதிர்ச்சி. பேரிழப்பும் கூட என கூறினார்.
ஹியூசின் இறுதி சடங்குகளை முன்னிட்டு மேக்ஸ்வேளியில் கடைகளும், உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஹியூசின் இறுதிச் சடங்குகள், பெரிய திரைகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.