வருமான வரி ஏய்ப்பு வழக்கில் ஜெயலலிதா அபராதம் கட்ட முன்வந்தது ஏன்? கருணாநிதி கருத்து

jaya and karunaஜெயலலிதா மீதான வருமான வரி ஏய்ப்பு வழக்கில் ஜெயலலிதா அபதாரம் கட்ட முன்வந்துள்ளதால் இந்த வழக்கு முடிவடையும் நிலையில் உள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி ‘ஜெயலலிதா தண்டனையிலிருந்து தப்பிக்கவே அபராதத் தொகையை செலுத்த முன்வந்திருப்பதாக  கூறியுள்ளார்.

நேற்று கருணாநிதி விடுத்துள்ள ஒரு அறிக்கையில் “17 ஆண்டுகள் நடைபெற்று வந்த வருமானவரி வழக்கில் நீதிமன்றங்களும், நீதிபதிகளும் செலவிட்ட பொன்னான நேரத்திற்கு யார் பொறுப்பாளி ஆவது. பணம் உள்ளவர்கள் அபராதத்தை செலுத்திவிட்டால் அவர்கள் செய்த குற்றம் இல்லை என்று ஆகிவிடுமா? என்று கேள்வி கேட்டுள்ள கருணாநிதி, அபராதத்தை செலுத்துகிறார்கள் என்றால் அவர்கள் தான் செய்த குற்றத்தை அவர்களே ஒப்புக்கொண்டு விட்டார்  என்றுதானே பொருள் என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

17 ஆண்டுகள் வழக்கை நடத்தி தீர்ப்பு வெளியிடப்பட உள்ள நேரத்தில் தப்பிக்க வழியில்லாமல் அபராதத் தொகையை கட்டி விடுவதாகக் கூறினால் அதனை வருமான வரித்துறை ஏற்றுக் கொள்ளுமா? என கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply