உலகில் முதல்முறையாக தாயும் மகளும் சேர்ந்து பெற்ற குழந்தை. லண்டன் டாக்டர்கள் சாதனை

mother wombஒரு தாய்க்கு இரு குழந்தைகளோ அல்லது பல குழந்தைகளோ பிறப்பதுண்டு. ஆனால் இரண்டு தாய்மார்கள் சேர்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பது இதுவரை சாத்தியமில்லாத ஒரு காரியமாக இருந்தது. தற்போது உலகில் முதல்முறையாக தாய், மகள் ஆகிய இருவரும் சேர்ந்து ஒரு குழந்தையை பெற்றுள்ளனர்.

லண்டனை சேர்ந்த ஒரு தாய், தான் பெற்றெடுத்த மகளுக்கு தனது கருப்பையை பரிசாக தந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கருப்பை அவரது மகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தாயின் கருப்பை மகளுக்கு பொருத்தப்படுவது உலகில் இதுவே முதல் முறை

தாயின் கருப்பை மூலம் கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதி மகள் ஒரு அழகான குழந்தையை பெற்றெடுத்தார். 29 வயதான அந்தப் பெண்னின்  பிறந்த  குழந்தையின் எடை  2.3 கிலோ ஆகும்.

தற்போது தாயுடன் குழந்தையும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து குழந்தை பெற தவமிருக்கும் ஏழு பேருக்கும், கருப்பை இல்லாத, கருப்பை அகற்றப்பட்ட 15,000 பிரிட்டிஷ் பெண்களுக்கும் பெரும் நம்பிக்கை அளித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ் கருத்தரிப்பு சமூகத்தின் தலைவர் ஆலன் பாசி புதிய அறுவை சிகிச்சை நடைமுறையில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகவும், இது வாடகைத் தாய் முறையில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். ஏனென்றால் ‘தன் குழந்தை இன்னொரு பெண்னின் வயிற்றில் வளர்வதை விட தன் வயிற்றில் வளர்வதையே ஒரு பெண் விரும்புவாள்’ என்றார். லண்டனின் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் “ நிச்சயம் இது ஒரு தாய் தன் மகளுக்குக் கொடுக்கக் கூடிய அதி அற்புதமான பரிசு” என்றார்.

Leave a Reply