வார ராசிபலன் 07/12/14 முதல் 13/12/14

download

திட்டமிட்டு பணியாற்றும் மேஷ ராசி அன்பர்களே!

விடாமுயற்சியுடன் செயல்பட்டு, முன்னேற்றம் காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும். சேமிக்க வாய்ப்புண்டு. உறவினர் ஒத்துழைப்போடு சுபநிகழ்ச்சி நடந்தேறும். அலைச்சலால் உடல் அசதி ஏற்பட வாய்ப்புண்டு. தொழிலதிபர், அரசாங்க வகையில் நற்பலன் பெறுவர். வியாபாரிகள், வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் செயல்படுவர். பணியாளர்கள் எதிர்பார்த்த சலுகைப்பயன் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், தலைமையின் இணக்கத்தைப் பெற்று மகிழ்வர். விவசாயிகள், கால்நடை வளர்ப்பில் நல்ல ஆதாயம் அடைவர். பெண்கள் சமூகநலப்பணிகளில், விருப்பத்துடன் கலந்து கொள்வர். மாணவர்கள், ஆர்வமுடன் படித்து வளர்ச்சி காண்பர்.

பரிகாரம்: அம்பிகை சன்னிதியில், தீபமேற்றி வழிபட்டால், வாழ்வு சிறந்தோங்கும்.

 உற்சாக மனப்பான்மை கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!

சிரமம் நீங்குவதோடு, வாழ்வில் சந்தோஷம் தென்படும். வருமானம் திருப்தி அளிக்கும். பற்றாக்குறை நீங்கும். மனம் போல சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். உடல்நலக்குறைவு நீங்கி சுகம் பெறுவீர்கள். தொழிலதிபர்கள், வெளிநாட்டு ஒப்பந்தம் மூலம் ஆதாயம் காண்பர். வியாபாரிகள், விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்களுக்கு, எதிர்பார்த்த சலுகை ஒவ்வொன்றாகக் கிடைக்கும். அரசியல்வாதிகள், ஆர்வத்துடன் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவர். விவசாயிகள், விளைபொருளை நல்ல விலைக்கு விற்று மகிழ்வர். பெண்கள், குழந்தைகளின் முன்னேற்றம் கண்டு சந்தோஷம் அடைவர். மாணவர்கள், பெற்றோர் பாராட்டும் விதத்தில் நன்கு படிப்பர்.

பரிகாரம்: மாலை நேரத்தில், நரசிம்மரை வழிபட, வாழ்வில் நன்மை பன்மடங்காகும்.

பேசுவதில் சாமர்த்தியசாலியான மிதுன ராசி அன்பர்களே!

இயன்ற உதவிகளை பிறருக்குச் செய்வீர்கள். புதிய வழிகளில் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. சுபவிஷயத்தில் எதிர்பார்த்த நல்ல செய்தி தேடி வரும். அலர்ஜி பிரச்னையால் அவதிப்பட நேரிடலாம் உஷார். தொழிலதிபர்கள், விரிவாக்கப்பணியில் விருப்பத்துடன் ஈடுபடுவர். வியாபாரிகள், சுறுசுறுப்பாக பணியாற்றி வாடிக்கையாளரை கவர்வர். பணியாளர்கள், அதிகாரிகளிடம் நற்பெயர் பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள், மக்கள் மத்தியில் கவுரவத்துடன் விளங்குவர். விவசாயிகள், மாற்றுப்பயிர் சாகுபடியால் நல்ல மகசூல் காண்பர். பெண்கள், புகுந்தவீட்டினரின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். மாணவர்கள், படிப்போடு விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வந்தால், ஆரோக்கியம் மேம்படும்.

நட்புக்கு முன்னுரிமை அளிக்கும் கடக ராசி அன்பர்களே!

சமூகத்தில் செல்வாக்கு மிக்கவராகத் திகழ்வீர்கள். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். திருமண முயற்சியில் நல்லமுடிவு கிடைக்கப் பெறுவீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்கள், புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு லாபம் காண்பர். வியாபாரிகள், புதிய கிளை தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவர். பணியாளர்கள், சகபணியாளர்களுடன் நட்புடன் பழகுவர். அரசியல்வாதிகள், தொண்டர் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர். விவசாயிகள், பணப் பற்றாக்குறையிலிருந்து விடுபடுவர். பெண்கள், அக்கம்பக்கத்தினருடன் சுற்றுலா சென்று மகிழ்வர். மாணவர்கள், சகமாணவர்களுடன் சேர்ந்து ஆர்வமாகப் படிப்பர்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வந்தால், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

சமூகநலனில் அக்கறை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கப் பெறுவீர்கள். வருமானம் உயரும். சேமிக்கும் எண்ணம் நிறைவேறும். சுபவிஷயத்தில் இருந்த தடங்கல் அனைத்தும் நீங்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்கள், தொழிலாளர் ஒத்துழைப்பால் வளர்ச்சி பெறுவர். வியாபாரிகள், வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் செயல்படுவர். பணியாளர்களுக்கு, சகபணியாளர் ஆதரவால் பணிச்சுமை குறையும். அரசியல்வாதிகள், மாறி வரும் அரசியல் சூழலில் ஆர்வம் கொள்வர். விவசாயிகள், திட்டமிட்டபடி நவீன உழவுக்கருவி வாங்குவர். பெண்கள், குடும்பத்தினரின் ஆதரவைக் கண்டு மகிழ்வர். மாணவர்கள், நன்கு படித்து, முதல் மாணவராகத் திகழ்வர்.

பரிகாரம்: சிவபெருமானை தினமும் வணங்கினால் ,சுபநிகழ்ச்சி இனிதே நிறைவேறும்.

உழைப்புக்கு முன்னுரிமை அளிக்கும் கன்னி ராசி அன்பர்களே!

எதிர்கால நலனுக்கான புதிய அடித்தளமிடுவீர்கள். பணவரவு சந்தோஷம் தரும். கடன் தீரும். திட்டமிட்டபடி சுபநிகழ்ச்சியை நடத்தி மகிழ்வீர்கள். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலதிபர்கள், வெளியூர் பயணத்தால் வருமானம் காண்பர். வியாபாரிகள், சகவியபாரிகள் மத்தியில் கவுரவத்துடன் திகழ்வர். பணியாளர்கள், நேர்மையுடன் பணியாற்றி நற்பெயர் வாங்குவர். அரசியல்வாதிகள், தலைமையின் அரவணைப்பைப் பெற்று மகிழ்வர். விவசாயிகள், நிலப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண முயல்வர். பெண்கள், கணவர்வழி உறவினர்களின் பாராட்டு பெறுவர். மாணவர்கள், கலைத்துறையில் விருப்பத்துடன் ஈடுபடுவர்.

பரிகாரம்: விஷ்ணுவுக்கு, துளசி அணிவித்து வழிபட்டால், நன்மை மேலோங்கும்.

நேர்மையுடன் செயலாற்றிடும் துலாம் ராசி அன்பர்களே!

நிதானத்துடன் இருந்தால் சிரமம் குறையும். செலவு அதிகரிக்கும். சிக்கனம் அவசியம் தேவை. சுபவிஷயங்களில் தடை உண்டாகி விலகும். அஜீரண பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு, கவனம். தொழிலதிபர்கள், தொழிலாளர் எதிர்ப்பால் சிரமப்படுவர். வியாபாரிகள், வாடிக்கையாளர் அதிருப்தியைச் சந்திப்பர். பணியாளர்கள், பணிச்சுமையால் சோர்வுக்கு ஆளாவர். அரசியல்வாதிகள், தலைமையின் பேச்சுக்கு கீழ்படிவது நல்லது. விவசாயிகள், செலவுக்கு பணமில்லாமல் திண்டாடுவர். பெண்கள், பிள்ளைகளின் செயல் கண்டு வருத்தம் கொள்வர். மாணவர்கள், அக்கறையுடன் படிப்பது அவசியம்.

சந்திராஷ்டமம்: 7.12.2014 காலை, 6:00 மணி முதல் மதியம், 12:47 மணி வரை.


பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டால். பிரச்னை அனைத்தும் பறந்தோடும்.

கடமையைக் கண்ணாக மதிக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பார்ப்பு அனைத்தும் விரைவில் நிறைவேறும். வருமானம் நன்றாக இருக்கும். கையிருப்பு கூடும். சுபவிஷயத்தில் உறவினர் ஆதரவு கிடைக்கும். உடல் நலத்தோடு மனமும் புத்துணர்ச்சியுடன் திகழும். தொழிலதிபர்கள், உற்பத்தியை அதிகப்படுத்தி வருமானம் காண்பர். வியாபாரிகள், வாடிக்கையாளர் விருப்பத்தை நிறைவேற்ற முயல்வர். பணியாளர்கள், விரும்பியபடி பணிமாற்றம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், எதிர்க்கட்சியினரிடமும் பாராட்டு காண்பர். விவசாயிகளுக்கு, அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும். பெண்கள், பிறந்த வீட்டின் பெருமையை நிலைநாட்டுவர். மாணவர்கள், அக்கறையுடன் படித்து முன்னேறுவர்.

சந்திராஷ்டமம்: இன்று மதியம், 12:48 மணி முதல் 9.12.2014 இரவு, 10:01 மணி வரை.


பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வந்தால், வாழ்வில் சந்தோஷம் நிலைக்கும்.

பெருந்தன்மையுடன் செயலாற்றும் தனுசு ராசி அன்பர்களே!

மக்கள் மத்தியில் அந்தஸ்து மிக்கவராகத் திகழ்வீர்கள். வருமானம் உயரும். ஆடம்பரச் செலவு செய்வீர்கள். சுபவிஷயத்தில் இருந்த தடை அனைத்தும் விலகும். அலைச்சலால் உடல் அசதிக்கு ஆளாக நேரிடும். தொழிலதிபர்கள், எதிர்கால வளர்ச்சி குறித்து ஆலோசிப்பர். வியாபாரிகள், விற்பனை பெருக்கத்தால் நல்ல லாபம் காண்பர். பணியாளர்கள், அதிகாரிகளின் மத்தியில் நற்பெயர் பெறுவர். அரசியல்வாதிகள், மக்கள் நலப்பணிகளில் ஆர்வம் செலுத்துவர். விவசாயிகள், நவீன கருவிகளால் பணியை மேம்படுத்துவர். பெண்கள், விருப்பம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வர். மாணவர்கள், பெற்றோர் மகிழும் விதத்தில் சிறப்பாகப் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 9.12.2014 இரவு, 10:02 மணி முதல் 12.12.2014 காலை, 9:14 மணி வரை.

பரிகாரம்: ராம நாமத்தை பக்தியுடன் ஜெபித்தால், தடை நீங்கி வளர்ச்சி ஏற்படும்.

உதவும் மனப்பான்மை கொண்ட மகர ராசி அன்பர்களே!

உங்களின் வெற்றி முயற்சியைப் பொறுத்து அமைந்திருக்கும். கைநிறைய பணம் இருந்தாலும், வந்த வேகத்தில் காலியாகும். மங்கல நிகழ்ச்சிகளில் இருந்த தடங்கல் விலகிப் போகும். உடல்நிலை ஒருநேரம் போல ஒருநேரம் இருக்காது. தொழிலதிபர்கள், திட்டமிட்டுச் செயல்பட்டு லாபமடைவர். வியாபாரிகள், விற்பனைப் பெருக்கத்தால் வருமானம் காண்பர். பணியாளர்களுக்கு, பணிச்சுமையில் இருந்து விடுதலை கிடைக்கும். அரசியல்வாதிகள், தலைமையின் ஆதரவைப் பெற்று மகிழ்வர். விவசாயிகள், நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவர். பெண்களுக்கு, தாய் வீட்டினரின் ஆதரவு கிடைக்கும். மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டும் விதத்தில் படிப்பர்.

சந்திராஷ்டமம்: 12.12.2014 காலை, 9:15 மணி முதல் 13.12.2014 நாள் முழுவதும்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபடுவது நன்மையை அதிகரிக்கும்.

மனவலிமையுடன் செயலாற்றும் கும்ப ராசி அன்பர்களே!

அந்தஸ்து மிக்கவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும். சுப நிகழ்ச்சிகளில் இருந்த தடங்கல் நீங்கும். உடல் நலத்தோடு மனநிலையும் சிறப்பாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு, புதிய ஒப்பந்தம் மூலம் லாபம் கூடும். வியாபாரிகள், விற்பனை அதிகரிப்பால் பணத்தைக் குவிப்பர். பணியாளர்கள், எதிர்பார்த்த சலுகை கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், நீண்டதுாரப் பயணம் மேற்கொள்வர். விவசாயிகளுக்கு, வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பெண்கள், மனம் போல நகை, புத்தாடை வாங்குவர். மாணவர்கள், நன்றாகப் படித்து கல்வி வளர்ச்சி காண்பர்.

பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையை வழிபட்டால், பிரச்னை நீங்கி நலம் சேரும்.

பெற்றோர் மீது அலாதி அன்பு கொண்ட மீன ராசி அன்பர்களே!

விடாமுயற்சி எடுத்து நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானமும், சேமிப்பும் நல்லபடியாக உயரும். சுபநிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்தி விடுவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். தொழிலதிபர்கள் ஊழியர் ஒத்துழைப்புடன் ஆதாயம் காண்பர். வியாபாரிகள், வாடிக்கையாளரைக் கவரும் விதத்தில் செயல்படுவர். பணியாளர்கள், நிர்வாகத்தினரின் பாராட்டைப் பெற்று மகிழ்வர். அரசியல்வாதிகள், மக்கள் நலப்பணிகளில் ஆர்வம் காட்டுவர். விவசாயிகள், விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்பர். பெண்களுக்கு, குழந்தைகளின் செயல்பாடு கண்டு மகிழ்வர். மாணவர்கள், பெற்றோர் பாராட்டும் விதத்தில் படிப்பர்.

பரிகாரம்: சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், தடங்கல் நீங்கி, சுபவாழ்வு ஏற்படும்.

Leave a Reply