மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரும், பாகிஸ்தானில் இருந்து இயங்கிவரும் தீவிரவாத இயக்கமான ஜமாத்-உத்-தாவா தலைவருமான ஹபீஸ் சயீத்தின் ‘டுவிட்டர்’ கணக்கு இன்று முதல் அதிரடியாக முடக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரசின் முழு ஆதரவுடன் சர்வ சுதந்திரமாக நடமாடி வரும் ஹபீஸ் சயீத், கடந்த வெள்ளிக்கிழமை லாகூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, ‘அமெரிக்க ராணுவத்துக்கு உதவிடும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கு தனது படைகளை அனுப்பிவைக்க இந்தியாவால் முடியும் என்றால்.., காஷ்மீரில் போராடிவரும் நமது சகோதரர்களுக்கு உதவி செய்வதற்காக காஷ்மீருக்குள் செல்லும் எல்லா உரிமைகளும் பாகிஸ்தானில் இருக்கும் முஜாகிதீன்களுக்கும் உண்டு’ என்று கூறினார்.
இதே கருத்துகள் ஹபீஸ் சயீத்தின் ‘டுவிட்டர்’ பக்கத்திலும் வெளியானதாக தெரிகின்றது. இதனையடுத்து, ஹபீஸ் சயீத்தின் பெயரில் உள்ள பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் இன்று முடக்கியுள்ளது