குட்டி சிங்கப்பூர் ஆகிறது ஆந்திர தலைநகர். சிங்கப்பூர் அமைச்சருடன் ஒப்பந்தம் கையெழுத்து.

singaporeஆந்திராவின் புதிய தலைநகரை அமைக்கும் முயற்சியில் முதலமைச்சர் சந்திரபாபு மிகவும் தீவிரமாக உள்ளார். ஒன்றிய ஆந்திரபிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பிரிந்த பின்னர் புதிய தலைநகரை அமைக்க சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேச அரசு நிலம் கையகப்படுத்தும், முயற்சி உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுத்து வந்தது. இந்நிலையில்  புதிய தலைநகரை வடிவமைக்கும் பணியை சிங்கப்பூர் அரசிடம் ஆந்திர அரசு ஒப்படைத்தது. ஆந்திர தலைநகர் அமைக்கும் பணியை சிங்கப்பூரிடம் ஒப்படைத்துள்ளதால் புதிய ஆந்திர தலைநகர் குட்டி சிங்கப்பூராக மாற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் ஈஸ்வரனும் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் இந்த ஒப்பந்தம் குறித்து பேசிய சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன், “ஆந்திர தலைநகர் அமைக்கும் ஒப்பந்தம் இரு தரப்புக்கும் பலன் தரும் என்றும் சிங்கப்பூரில் பின்பற்றப்பட்ட அதே வடிவமைப்பு முறையை ஆந்திர தலைநகரில் பின்பற்றப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சந்திரபாபு நாயுடு “பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல் ரீதியில் சிறந்ததாக புதிய தலைநகரம் இருக்கும் என்றும் தெரிவித்தார். தலைநகரின் மையப்பகுதி 8 முதல் 15 சதுர கிலோ மீட்டர் பரப்பில் இருக்கும் என்றும் இதன் இறுதி வடிவமைப்பு அடுத்தாண்டு மத்தியில் தயாராகி விடும் என்றும் ஆந்திர முதல்வர் தெரிவித்துள்ளார். தலைநகர கட்டுமானப் பணிகளில் சிங்கப்பூர் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும் ஆந்திர மாநில தொழில்நுட்ப நிபுணர்களும் அதில் ஈடுபடுவார்கள் என்றும் ஆந்திர முதல்வர் தெரிவித்தார்.

Leave a Reply