் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராளுமன்ற கூட்டம் பரபரப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் எம்.பி ஒருவர் தனது ஐபேடில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பியாக இருப்பவர் நிஜல் மில்ஸ் என்பவர். இவர் நேற்று பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். பாராளுமன்றத்தில் முக்கிய பிரச்சனை ஒன்று குறித்து விறுவிறுப்பாக விவாதம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நிஜல் மில்ஸ் தனது ஐபேடில் கேண்டி கிரஷ் என்ற கேம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தார். இதை பார்த்த நாடாளுமன்ற கூட்டத்தை வீடியோ எடுக்கும் வீடியோகிராபர், வீடியோ எடுத்தார்.
பாராளுமன்ற கூட்ட நடவடிக்கைகள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்ததால் நிஜல் மில்ஸ் கேம்ஸ் விளையாடுவதை நாட்டு மக்கள் அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது கேம்ஸ் விளையாடிய எம்.பிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நிஜல் மில்ஸ் தனது செயலுக்கு வருந்துவதாக கூறி அனைவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் மீது நாடாளுமன்ற குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.