மகாராஷ்டிர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெற்று சிவசேனா ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இந்த புதிய ஆட்சியில் இந்துத்துவா திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் அதை நிரூபிக்கும் வண்ணம் விஸ்வ இந்து பரிஷத் இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் வெங்கடேஸ் அப்தியோ மசூதிகளில் தொழுகையின்போது உபயோகிக்கும் ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கடேஷ் அப்தியோ, “விநாயகர் சதூர்த்தி போன்ற இந்துக்களின் பண்டிகையின் போது ஒலிபெருக்கிகளை உபயோகித்தால் உடனே நீதிமன்றம் செல்லும் வருடம் முழுவதும் மசூதிகளில் ஒலிக்கும் ஒலிபெருக்கிகள் குறித்து கண்டுகொள்வதில்லை. எனவே மகாராஷ்டிராவில் மசூதிகளில் தொழுகையின் போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு மாநில அரசு தடை விதிக்க வேண்டும்.
மேலும் தொலைக்காட்சிகளில் நடக்கும் பேஷன் ஷோக்களால் இந்திய கலாச்சாரம் சீரழியும் அபாயம் உள்ளது. எனவே பேஷன் ஷோக்களூக்கு தடை விதிக்க வலியுறுத்தி விரைவில் விஸ்வ இந்து பரீசித் மூலம் போராட்டம் நடத்தப்படும்.