பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேத் மிடில்டனுடன் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இளவரசர் தம்பதிக்கு அமெரிக்க விமான நிலையத்தில் மிகச்சிறப்பான அரசு முறை மரியாதை அளிக்கப்பட்டது.
நேற்று நியூயார்க்கில் செப்டம்பர் 11, 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்ற வில்லியம்ஸ் தம்பதியினர் அங்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் தாக்குதல் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டிருந்த மியூசியத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் வில்லியம்ஸ் -மிடில்டன் தம்பதியினர் நியூயார்க் மேயர், முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். பிரபல பாப் பாடகி பியான்ஸ் அவர்களும் அரச குடும்பத்தினரை தனது சார்பில் வரவேற்றார். மேலும் வில்லியம்ஸ் இன்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கவிருக்கின்றார்.