அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படம் இருப்பதில் தவறில்லை. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

jayalalithaதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்ததால் அவரது படத்தை தமிழக அரசு அலுவலகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர் கருணாநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவுக்கு பதில் மனு அளித்த தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், ‘தமிழக அரசு அலுவலகங்களில் வ.உ.சி, காயிதே மில்லத், இந்திரா காந்தி, முன்னாள் முதல்வர்கள், பதவியில் உள்ள முதல்வர்கள் படங்களை வைக்கலாம் என்று 2006, ஜூன் 4-ல் அரசாணை (எண்: 457) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த அரசாணைப்படி தமிழக அரசு அலுவலகங்களில் முன்னாள் முதல்வர் படம் இருப்பதில் தவறில்லை. மனுதாரர் திமுக வழக்கறிஞர் அணியில் உள்ளதால் இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது’ என்று கூறியுள்ளார்.

இந்த மனு மீதான தீர்ப்பு டிசம்பர் 22ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply