தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் பதவியை துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் பதவியை வகித்து வந்தார். இந்நிலையில், அவர் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை கட்சித்தலைவர் கருணாநிதியிடம் அளித்தாகவும், ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க கருணாநிதி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.