சீனாவின் அதி நவீன மொபைல் போன் ஜியோமிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை வித்துள்ளது.
பிரபல மொபைல் போன் நிறுவனமான எரிக்சன், சீனாவின் ஜியாமிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருந்தது.
அதில், ‘எங்களது தொழில்நுட்பத்தை ஜியாமி நிறுவனம் அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளது. இது காப்புரிமையை மீறிய செயல்’ என்று தெரிவித்துள்ளது.
இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், காப்புரிமை தொடர்பான சட்ட சிக்கல்களைத் தீர்க்கும் வரை ஜியாமி நிறுவனம், இந்தியாவில் மொபைல் போன்களை விளம்பரப்படுத்தவோ, விற்கவோ கூடாது என்று உத்தரவிட்டுள்ளது என ஸ்பைசி ஐபி இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், கோர்ட் உத்தரவு தங்களுக்கு கிடைக்கவில்லை என ஜியாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.