புத்தரை இழிவு படுத்தும் விதமாக விளம்பரத்திய மூன்று பேர் பர்மாவில் கைது செய்யப்பட்டுளனர்.
பர்மாவில் உள்ள யாங்கொன் நகரில் கேஸ்ட்ரோ பார் என்ற மதுபாரில் புத்தர் காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு பாட்டுக்கொண்டே புன்னகைப்பது போல ஒரு விளம்பரத்தை வைத்திருந்தனர். பர்மா நாட்டின் சட்டப்படி எந்த ஒரு மதத்தையும் இழிவுபடுத்துவது கடும் குற்றமாக கருதப்படுகிறது. எனவே இதுகுறித்து வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய பர்மா போலீஸார், புத்தரை இழிவு படுத்தும் வகையில் விளம்பரம் செய்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இரண்டு பேர் பர்மாவை சேர்ந்தவர்கள், என்றும் ஒருவர் நியூசிலாந்தை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூவருக்கும் இரண்டு வருட சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.