இலங்கை அதிபர் தேர்தல். ராஜபக்சவுக்கு எதிரணி தலைவர் திடீர் ஆதரவு

rajapakseஇலங்கையில் வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலி அதிபர் ராஜபக்சே மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். தேர்தல் நாள் நெருங்க நெருங்க எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கும், ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சிக்கும் தலைவர்கள் பலர் மாறி வருகின்றனர். இந்நிலையில் ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிடும் எதிரணியில் இருந்து உதயா கம்மன்பிலா என்பவர் விலகி, ராஜபக்ச அணியில் சேர்ந்துள்ளார். இதனால் மூன்றாவது முறையும் அதிபர் ஆவதற்கு ராஜபக்சவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிடும் மைத்ரிபால சிறிசேனா என்பவரின் அணியில் இருந்த புத்த தேசியவாத கட்சியான தேசிய பாரம்பரிய கட்சியைச் சேர்ந்த உதயா கம்மன்பிலா நேற்று திடீரென ராஜபக்சவை ஆதரிக்கும் விதத்தில் எதிரணியில் இருந்து விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸா அட்டநாயகே மற்றும் ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் ஜெயந்த கெடகோடா ஆகிய‌ இரண்டு முக்கியத் தலைவர்கள் எதிரணியில் இருந்து விலகி ராஜபக்சவுக்கு ஆதரவு அளித்திருக்கும் நிலையில் உதயா கம்மன்பிலாவின் வருகை ராஜபக்சேவுக்கு கூடுதல் பலத்தை தந்துள்ளது.

தற்போது உதயா கம்மன்பிலாவும் சேர்ந்திருப்பதால், ராஜபக்ச‌ மீண்டும் அதிபர் பதவியை பிடிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply