தமிழறிஞர் உ.வே.ச வாழ்ந்த சென்னை வீடு இடிப்பு.

houseதமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் சென்னையில் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டது. இதற்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பழங்கால தமிழ் நூல்களையும் ஓலைச்சுவடியில் இருந்த கையெழுத்து ஏடுகளை தொகுத்து புறநானூறு, குறுந்தொகை, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல நூல்கள் நமக்கு கிடைக்க காரணமாக இருந்த தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர்.

இவர் சென்னையில் சிலகாலம் தங்கியிருந்து சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரிந்தார். அப்போது சென்னை திருவல்லிக்கேணியில் சொந்த வீடு ஒன்று வாங்கி அதற்கு தனது ஆசிரியரின் நினைவாக ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் வைத்தார்.

உ.வே.சவின் வீட்டிற்கு ரவீந்திர நாத் தாகூர் முதல் பல அறிஞர்கள் வந்துள்ளனர். இந்த வீடு அவருக்கு பின்னர் அவருடைய உறவினர்களால் பராமரிக்கப்பட்டது சமீபத்தில் இந்த வீட்டை விலைக்கு வாங்கிய ஒருவர் இந்த இடத்தில் புதிய வீடு கட்டுவதற்காக இடித்தார். இதற்கு தமிழறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அவர்களுடைய எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இடிக்கப்பட்டது. இதனால் தமிழறிஞர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply