சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள வூனிங் என்ற நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மீது உயரழுத்த மின்கம்பி பட்டதால் அந்த நபர் உயிரோடு எரிந்து துடிதுடித்து சாலையில் மரணம் அடைந்தார். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் சாம்பலாயிற்று. பட்டப்பகலில் பிசியான சாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
தெற்கு சினாவை சேர்ந்த வூனிங் என்ற நகரை சேர்ந்து ஷாமிங் லியாங் என்ற 31 வயது நபர் நேற்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் மேல் இருந்த உயரழுத்த மின்கம்பி திடீரென அறுந்து அவருடைய கழுத்தில் விழுந்தது. இதனால் அவரது உடல் தீப்பிடித்து எரிந்தது. கண் இமைக்கும் நேரத்தில் தீயில் உயிரோடு கருகி துடிதுடித்த அவரை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சென்ற மோட்டார் சைக்கிளும் எலும்புக்கூடு போல மாறியது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போக்குவரத்து போலீஸார் தகவல் அறிந்து உடனடியாக விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். உயரழுத்த மின்கம்பி எப்படி அறுந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மின்சார துறையுடன் ஆலோசனை செய்யப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.