தாலி கட்டிய மனைவியை முதலிரவு அன்றே காதலனிடம் சேர்த்து வைத்த கணவன்.

first nightகே.பாக்யராஜ் இயக்கிய அந்த 7 நாட்கள்’ என்று ஒரு திரைப்படம். அதில் திருமணமான முதலிரவு அன்று தனது மனைவி வேறு ஒருவரை காதலித்துள்ளார் என்று தெரிந்தது, அவருடைய காதலனிடம் தனது மனைவியை சேர்த்து வைக்க முயற்சிப்பார். இந்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்களின் ஆதரவை பெற்றது.

இதைப்போல தமிழகத்தில் உள்ள திருச்சி அருகே உண்மையிலேயே ஒரு சம்பவம் நேற்று நடந்துள்ளது. திருச்சி அருகேயுள்ள ஒசலாபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், துறையூர் அருகேயுள்ள குன்னுபட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த வெள்ளியன்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.
திருமண நல்லபடியாக முடிந்ததை அடுத்து முதலிரவுக்காக மணமக்களின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். முதலிரவு அறையில் புது மாப்பிள்ளை, தனது மனைவிக்காக காத்திருந்தார். சிறிது நேரம் கழித்து அறைக்கு வந்த புதுப்பெண், மாப்பிள்ளையின் காலில் விழுந்து கதறி அழுதுள்ளார்.

மேலும், ”நான், எங்கள் ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவரை நான்கு வருடமாக காதலித்து வருகிறேன். இது எங்கள் வீட்டிற்கும் தெரியும். அப்படி இருந்தும், இந்த திருமணத்திற்கு என்னை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைத்தனர். எனவே, எனது காதலனுடன் என்னைச் சேர்த்து வையுங்கள். அவருடன் சேர்த்து வைக்காவிட்டால் நான் செத்து விடுவேன்” எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, இரவு முழுவதும் நன்றாக யோசித்த மணமகன், தன் மனைவியை காதலனுடன்,சேர்த்து வைக்க முடிவு செய்தார். அடுத்தநாள் காலை விடிந்ததும் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து இதுகுறித்து பேசியுள்ளார். இரண்டு குடும்பத்தினரும் முதலில் முரண்டு பிடித்தாலும், பிறகு வழியில்லாமல் சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து, துறையூர் காவல்துறையினர் முன்னிலையில், தற்போது நடைபெற்ற திருமண செலவை மணப்பெண்ணின் பெற்றோர் அல்லது காதலன் குடும்பம் ஏற்றுக் கொள்வது என ஒப்பந்தம் போடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, மணப்பெண்ணின் காதலனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வரவழைக்கப்பட்டார். அவர் வந்தவுடன், இருவருக்கும் துறையூர் பெருமாள் மலையடிவாரத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடந்தது.

தாலி கட்டிய மனைவியை, அவர் காதலித்தவருக்கே திருமணம் செய்து வைத்த புதுமாப்பிள்ளையை அனைவரும் பாராட்டினர்.

Leave a Reply