எம்.பி.ஏ படிப்பில் சேர இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் அழைப்பு

2

ஜார்கண்ட் மாநிலம் தான்பாத்தில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ் நிறுவனத்தில் 2015-17ம் ஆண்டிற்கான எம்பிஏ படிப்பில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.

தகுதி:

+2விற்கு பிறகு ஏதாதொரு பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திரனாளிகள் 45 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.2000. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 இதனை டிடியாக எடுக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை;

CAT 2014ல் செல்லுபடியாகத்தக்க மதிப்பெண்கள் வைத்திருக்க வேண்டும். கேட்-2014 மதிப்பெண்கள் அடிப்படையில் குழுவிவாதம் மற்றும் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்பட்டு இறுதியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.ismdhanbad.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்றடைய பிப்ரவரி 27 கடைசி நாளாகும்.

Leave a Reply