உலக அழகி பட்டம் பெற்ற மருத்துவக்கல்லூரி மாணவி. இந்திய அழகி ஏமாற்றம்.

miss worldலண்டன் மருத்துவக்கல்லூரியில் டாக்டருக்கு படித்து வரும் மாணவி ஒருவர் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

நேற்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் உலக அழகி போட்டிக்கான இறுதிச்சுற்று நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.

இந்த இறுதிச்சுற்றில் தென்னாப்பிரிகாவை சேர்ந்த அழகி ரோலின் ஸ்ட்ராஸ் என்பவர் உலக அழகி பட்டத்தை வென்றார். இவர் லண்டன் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு மருத்துவ பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் ஏற்கனவே மிஸ் லண்டன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உலக அழகிப்போட்டியில் முதல் பத்து இடங்களில் தேர்வு செய்யப்பட்ட இந்தியாவின் கோயல் ராணா, அடுத்து நடைபெற்ர டாப் 5 சுற்றுக்கு தேர்வு செய்யப்படவில்லை.

இந்த போட்டியில் ஹங்கேரி அழகி எதினா குல்ஸ்கர் இரண்டாவது இடத்தையும், அமெரிக்க அழகி எலிசபெத் சஃப்ரித் மூன்றாவது இடத்தையும் பெற்றார்.

கடந்த 2000ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை வென்ற பின்னர் இந்திய அழகி யாரும் உலக அழகி பட்டத்தை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply