மின்சாரத்தை சரியாக பராமரிக்காமல் வீணடிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.
டெல்லியில் தேசிய எரிசக்தி சேமிப்பு நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுடன் மின்சார துறை தொடர்பாக இன்று கலந்துரையாடினார். அப்போது, நாட்டில் ஒவ்வொரு வருடமும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மின்சாரத்தை வீணடிப்பவர்களால் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே மின்சாரத்தை வீணாக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பதுடன், அதை சேமிப்பவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் சலுகை அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நாட்டின் இயற்கை வளம், வெப்பமயமாதலை ஓரளவு தடுக்க முடியும். மேலும், மின்சார சேமிப்பால் ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்தவும் முடியும் என்றார்.