சிட்னி ஓட்டலில் நுழைந்த தீவிரவாதி சுட்டுக்கொலை. இந்தியர் உள்பட அனைவரும் மீட்பு.

sydney attack 1 ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரின் ஓட்டல் ஒன்றில் நுழைந்து அங்கிருந்த வாடிக்கையாளர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி வந்த தீவிரவாதியை ஆஸ்திரேலிய போலீஸார் அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, பிணைக்கைதிகளை பத்திரமாக மீட்டனர். இந்த ஆபரேஷனில் தீவிரவாதி உள்பட இரண்டு பேர் பலியாகினர். மேலும் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.

[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1sxkoKs” standard=”http://www.youtube.com/v/UM08Gp1kKxc?fs=1″ vars=”ytid=UM08Gp1kKxc&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep3062″ /]

இதையடுத்து, 16 மணி நேரம் நீடித்த இந்த பரபரப்பு சம்பவம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

பிணைக்கைதிகளை தன் பிடியில் வைத்திருந்த தீவிரவாதி ஈரான் அகதி என்றும் அவர் பெயர் மோனீஸ் ஹரான் என்றும் தெரிய வந்துள்ளது.

sydney attack
ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ஓட்டலுக்குள் இருந்து பிணைக்கைதிகள் சிலர் அலறியடித்து கொண்டு வெளியேறினர். அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

காயமடைந்த சிலரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு போலீஸார் கொண்டு சென்றனர்.

சம்பவம் நடந்த சிட்னி ஓட்டலில் பிணைக்கைதிகளாக சிக்கியிருப்பவர்களில் தங்கள் நிறுவன ஊழியர் ஒருவரும் அடங்குவார் என பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் உறுதிபடுத்தியது. இன்போசிஸ் ஊழியர் பின்னர் பத்திரமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள பெற்றோரிடம் அவர் தான் நலமாக இருப்பதாக தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply