மேஷம்
குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:வெள்ளை, நீலம்
ராசி குணங்கள்
ரிஷபம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, மயில் நீலம்
ராசி குணங்கள்
மிதுனம்
நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், மஞ்சள்
ராசி குணங்கள்
கடகம்
குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்:ரோஸ், ப்ரவுன்
ராசி குணங்கள்
சிம்மம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்:வைலெட், இளஞ்சிவப்பு
ராசி குணங்கள்
கன்னி
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:க்ரீம் வெள்ளை, ப்ரவுன்
ராசி குணங்கள்
துலாம்
இன்றையதினம் திட்டமிட்டவை தாமதமாகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:மஞ்சள், பிங்க்
ராசி குணங்கள்
விருச்சிகம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்:சில்வர் கிரே, ப்ரவுன்
ராசி குணங்கள்
தனுசு
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களால் உதவிகள் உண்டு. உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்:ஆரஞ்சு, பச்சை
ராசி குணங்கள்
மகரம்
இன்றையதினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ப்ரவுன்
ராசி குணங்கள்
கும்பம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்:மெரூண், ஆரஞ்சு
ராசி குணங்கள்
மீனம்
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:கிரே, மஞ்சள்