இன்று சனிப்பெயர்ச்சி துலாம் ராசியில் இருந்து இன்று மதியம் 2.45 மணிக்கு விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார்

 

1 (5)

நவக்கிரகங்களில் சக்தி மிக்கவராக கருதப்படுபவர் சனி. இவர் தன் உச்சவீடான துலாம் ராசியில் இருந்து இன்று மதியம் 2.45 மணிக்கு விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார். 3,7,10 ஆகிய தனது மூன்று பார்வைகளால் கன்னி, ரிஷபம், சிம்மம் ஆகிய ராசியினரைப் பலப்படுத்துகிறார். ரிஷப ராசியினர், ரோகிணி நட்சத்திரத்தினர் ஆகியோருக்கு சனி எப்போதும் நன்மை செய்வார் என்பது பொது விதி.

ஏழரைச்சனியாக இருந்தாலும், இரண்டாவது சுற்றாக இருப்பவர்களுக்கு பொங்கும் சனி என்பதால், அதிக துன்பம் உண்டாகாது என்பதும் குறிப்பிடத்தக்கது. பிறந்த ஜாதகத்தில் சனி 3,6,11ம் இடங்களில் ஆட்சி அல்லது உச்சமாக இருந்தால் எப்போதும் நன்மையே உண்டாகும் என்பது சிறப்பு விதி. விருச்சிகத்திற்கு வரும் சனியால் உண்டாகும் பலன்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். மேஷத்திற்கு எட்டாம் இடமாக அஷ்டமத்துச்சனி என்பதால் சிரமங்களும், ரிஷபத்திற்கு ஏழாம் இடமான கண்டகச் சனியாவதால் சுமாரான பலனும், மிதுனத்திற்கு சுப சஷ்டமச்சனியாக ஆறாம் இடத்திற்கு வருவதால் துலாம் ராசியில் இருந்து இன்று மதியம் 2.45 மணிக்கு விருச்சிகத்திற்கு பெயர்ச்சியாகிறார்ன்மையும், கடகத்திற்கு பூர்வபுண்ணியச்சனி என்னும் ஐந்தாம் இடத்திற்கு சனி வருவதால் ஓரளவு பலனும் உண்டாகும். சிம்மத்திற்கு நான்காம் இடமான அர்த்தாஷ்டமச் சனியாவதால் சிரமங்களும்,

1 (9)

கன்னிக்கு சுபதைரிய சனியாக மூன்றாம் இடத்தில் அமர்வதால் நன்மையும், துலாமிற்கு தனபாத குடும்பச்சனியாக இரண்டாம் இடத்திலும், விருச்சிகத்திற்கு ஜென்மச் சனியாக ராசிக்கும், தனுசுவிற்கு அயன, சயன, விரயச் சனியாக 12ம் இடத்திற்கும் வருவதால் சிரமங்கள் ஏற்படலாம். மகரத்திற்கு சுபலாபச் சனியாக 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் நன்மையும், கும்பத்திற்கு ஜீவனச் சனி என்னும் பத்தாம் இடச் சனி என்பதால் சுமாரான பலனும், மீனத்திற்கு பாக்கியச் சனி என்னும் ஒன்பதாம் இடச் சனியாக வருவதால் நன்மையும் உண்டாகும். மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய பரிகார ராசியினர் குலதெய்வ வழிபாடு செய்தும், கோளறு பதிகம், திருநள்ளாறு பதிகம் படிப்பதும், சனியின் கெடுபலனைக் குறைக்க துணை புரியும். சனிக்கிழமையில் விரதமிருந்து காகத்திற்கு உணவிடுவதும், சனிக்கிழமையில் வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயரை வழிபடுவதும் துன்பத்தைப் போக்கி நன்மையளிக்கும். மனதாலும் பிறருக்கு தீங்கு நினைக்காத நல்லவர்கள், தர்ம சிந்தனை கொண்டவர்கள், நேர்மையாக உழைப்பவர்கள், செய்த பாவத்திற்கு உண்மையாக மனம் வருந்துபவர்கள் ஆகியோரை சனீஸ்வரர் ஒருபோதும் தண்டிக்க விரும்புவதில்லை. நீதியை நிலைநாட்டுபவரான சனி, விருச்சிகத்தில் மூன்று ஆண்டுகாலம் சஞ்சரித்த பின், 2017 டிசம்பர் 19 இரவு 10.27க்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சியன்று விசேஷ பூஜைகள் நடக்கின்றன. அன்று கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், சனிப்பெயர்ச்சியைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய வரலாம்.

Leave a Reply