பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் ராணுவப் பள்ளி மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 7 மணி நேரத்துக்கு பின்னர் முடிவுக்கு வந்தது. பாகிஸ்தான் ராணுவம் பள்ளிக்குள் நுழைந்த 6 தீவிரவாதிகளையும் அதிரடியாக தாக்கி சுமார் 7 மணி நேரங்கள் கழித்து சுட்டுக் கொன்றனர்.
ராணுவத்துக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் மொத்தம் 132 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதில் 126 பேர் பள்ளி மாணவர்கள் என்பது வருத்தத்துக்கு உரிய தகவல் ஆகும். இவர்களில் பலர் மனிதக்கேடயமாக பயன்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர்.
பெஷாவர் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணையை நானே முன்னின்று விசாரிப்பேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும் அவர்கள் என் குழந்தைகள்,அவர்களின் மரணம் என்னுடைய இழப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, ஐ.நா தலைவர் பான் கீ மூன் உள்பட உலகத்தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.