ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு இந்தியாவில் தடை. உள்துறை அமைச்சர் அதிரடி அறிவிப்பு.

isisஇந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு அந்நாட்டு அரசுகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஊடுருவும் நோக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துக்கு டுவிட்டரில் பிரசாரம் செய்து வந்த பெங்களூரைச் சேர்ந்த மெஹதி மசூர் பிஸ்வாஸ் என்ற 24 வயது பட்டதாரி இளைஞர் நேற்று முந்தினம் போலீஸ் பிடிபட்டார்.

இது தொடர்பாக பாராளுமன்றத்தி கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசும்போது, ”ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் நடவடிக்கைகள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியவுடன் அவற்றை நாங்கள் கவனத்தில் கொண்டோம். இந்த நிகழ்வுகள், எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கின்றன. அதன் நடவடிக்கைகளை ஒடுக்க விரும்புகிறோம். அதனால், ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்படுகிறது.

இந்திய வாலிபர்கள் சிலர் ஐ.எஸ். இயக்கத்தை ஆதரித்தது உண்மைதான். ஆனால் அந்த எண்ணிக்கை, புறக்கணிக்கத்தக்க அளவுக்கு மிகவும் குறைவானது தான். ஆனாலும், இந்த பிரச்னையை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மையினர், தங்கள் பிள்ளைகள் அந்த இயக்கத்தின் பிடியில் சிக்குவதை ஊக்குவிப்பது இல்லை. அதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

ஐ.எஸ். இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டாலும், சந்தேகத்துக்குரிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த எந்த அப்பாவியும் காவலில் வைக்கப்பட மாட்டார்கள். அப்படி யாராவது வைக்கப்பட்டால், அதை எனது கவனத்துக்கு கொண்டு வரலாம்” என்றார்.

Leave a Reply