6ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மாணவன்.

student rape kuyathamவேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே 6 ஆம் வகுப்பு படித்து வரும் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த மாணவன் ஒருவனை போலீசார் ஓசூரில் பிடித்துள்ளனர்.

வேலூர் மாவட்டம்  கே.வி.குப்பம் அருகே உள்ள முனுகம்பட்டு என்னும் கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி விஜயகுமார் என்பவரது 2வது மகள் கீர்த்திகா. 11 வயதான இவர் மாச்சனூர் அரசு மேல்நிலை பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்திகா நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வெகு நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களிலும் தேடி உள்ளனர்.

இந்நிலையில், கல்யாண பெருங்குப்பம் பகுதியில் முட்புதருக்குள் கீர்த்திகா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட மாணவி படித்து வந்த மாச்சனூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவன் ஒருவன் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்து அந்த மாணவனை போலீசார் தேடி வந்தனர். போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றில் தேடப்பட்டு வந்த மாணவன் ஓசூர் அருகே தலைமறைவாக இருப்பதாக தெரிய வந்தது. உடனே ஓசூர் விரைந்து சென்ற போலீஸார் அந்த மாணவனை  பிடித்து குடியாத்தம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave a Reply