சில பக்தர்கள் வீட்டிலும், சிலர் பொது இடங்களிலும் ஐயப்ப விக்ரகம் வைத்து சிறப்பு பூஜை நடத்துகின்றனர். அப்போது செய்ய வேண்டிய உபசார முறைகள்:
1. ஆவாஹனம் – இறைவனை அழைத்தல்
2. ஆசனம் – இருக்கை கொடுத்தல்
3. பதயம் – திருவடிகளை கழுவ தண்ணீர் கொடுத்தல்
4. அர்க்யம் – மரியாதையைக் காட்ட தண்ணீர் கொடுத்தல்
5. ஆசமனம் – குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தல்
6. மதுவர்க்கம் – பால் அல்லது பழம் தருதல்
7. ஸ்நானம் – நீராடல்
8. வஸ்திரம் – உடை கொடுத்தல்
9. யக்ஞோபீவிதம் – பூணூல் அணிவித்தல்
10. கந்தம் – வாசனை திரவியம் கொடுத்தல்
11. புஷ்பம் – மலர் சாத்துதல்
12. தூபம் – சாம்பிராணி காட்டுதல்
13. தீபம் – விளக்கேற்றுதல்
14. நைவேத்தியம் – பிரசாதம் வைத்தல்
15. தாம்பூலம் – வெற்றிலை பாக்கு வைத்தல்
16. நீராஞ்சனம் – கற்பூரம் காட்டுதல்.