முதன்முதலாக விமானப்பயணம் செய்த பயணியால் ஏற்பட இருந்த விபரீதம். சீனாவில் பெரும் பரபரப்பு.

chinese flight passengerசீனாவில் முதன்முதலாக விமானத்தில் பயணம் செய்த ஒருவர் ஃபிரஷ்ஷான காற்று வேண்டும் என்பதற்காக விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவில் உள்ள சியாமின் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஒரு விமானம் ஹாங்சூ என்ற நகரில் இருந்து செங்டூ என்ற நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் முதன்முதலாக விமானப்பயணம் மேற்கொண்டார். விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் இவருக்கு வேர்க்க ஆரம்பித்ததால், உடனடியாக அவர் விமானத்தில் இருந்து எழுந்து சென்று எமர்ஜென்ஸி கதவை திறக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சக பயணிகளும், விமான ஊழியர்களும் அவரை தடுத்தி நிறுத்தினார். அவரிடம் எதற்காக எமர்ஜென்ஸி கதவை திறக்கின்றீர்கள் என்று கேட்டதற்கு தனக்கு மிகவும் புழுக்கமாக இருப்பதாகவும் நல்ல காற்று வாங்குவதற்காக கதவை திறக்க முயன்றதாகவும் கூறினர்.

முதன்முதலாக விமானப்பயணம் செய்வதால் அவருடைய அறியாமையை அறிந்துகொண்ட விமான ஊழியர்கள் அவரை எச்சரித்து அவரது இருக்கையில் உட்கார வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த விமானத்தில் சிலமணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply