இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் இந்துக்களின் மூதாதையர்கள். தொகாடியா

thogadiaபாரத பிரதமராக மோடி தலைமையேற்றதில் இருந்து முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் மீது சர்ச்சைக்குரிய வகையில் பாஜக தலைவர்கள் கருத்து கூறி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து நேற்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா ஒரு கூட்டத்தில் பேசியபோது, ‘இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்துக்களின் மூதாதையர்கள் என்று கூறியுள்ளார். இவரது பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குஜராத்தில் உள்ள பாவ்நகரில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் 50-ஆம் ஆண்டு விழாவில் தொகாடியா பேசியபோது “இந்திய முஸ்லிம்களின் மூதாதையர்கள் இந்துக்கள். அதேபோல் இந்திய கிறிஸ்தவர்களின் மூதாதையர்களும் இந்துக்களே. முகலாய மன்னர்கள் இந்துக்களை இஸ்லாமிய மதத்திற்கு அடாவடித்தனமாக வாள்களின் அதிகாரத்தினால் மதம் மாற்றினர்.

இன்றைய இந்தியாவில் இந்துக்கள் மீதான அத்தகைய அடாவடித்தனங்கள், ஆதிக்கங்கள் இல்லை. இப்படியிருக்கையில் ஒருவர் மீண்டும் இந்து மதத்தில் இணைய விரும்பி வந்தால் அவர்களை இருதயபூர்வமாக அரவணைக்க வேண்டும்” என்றார்.

டிசம்பர் 8ஆம் தேதி ஆக்ராவில் முஸ்லிம்கள் சிலரை இந்துக்களாக தர்ம ஜாக்ரன் மன்ச் என்ற அமைப்பு மதமாற்றம் செய்ததையடுத்து கடும் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தொகாடியா இவ்வாறு பேசியுள்ளார்

Leave a Reply