கணவரின் மருத்துவ செலவுக்காக ஒருவயது குழந்தையை ஏலம் விட்ட சீன பெண்.

baby saleசீனாவில் உள்ள ஒரு பெண் கணவரின் மருத்துவ செலவுக்காக நடு ரோட்டில் தனது ஒரு வயது குழந்தையை ஏலம் விட்டு விற்பனை செய்த காட்சி காண்போரை கலங்க வைக்கும் அளவில் இருந்தது.

சீனாவை சேர்ந்த நீ கொயங் என்ற பெண் தனது கணவர் ஜுயோ ஜிங்குய் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை செய்ய ரூ.10 லட்சம் வரை தேவை என்று கூறிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வேறு வழியின்றி கணவரை காப்பாற்ற தனது ஒரு வயது குழந்தையை நடுரோட்டில் ஏலம்விட தொடங்கினார்.

ஒரு வயது குழந்தையை தனது முதுகில் சுமந்துகொண்டே ஒரு அட்டையை தனது கையில் ஏந்தியிருந்தார். அதில் “எனது கணவர் உயிருக்கு போராடியவாறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனது கணவரை காப்பாற்ற எனக்கு ரூ..10 லட்சம் தேவைப்படுகிறது. எனது ஒரு வயது குழந்தையை பெற்றுக்கொண்டு யாராவது எனக்கு பண உதவி செய்யுங்கள்’ என்று எழுதியிருந்தது.

baby sale 1

அவருடைய சோகத்தை புரிந்து கொண்ட பலர் தங்களால் முடிந்த அளவுக்கு பணம் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால் யாரும் குழந்தையை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  சிலமணி நேரங்களில் அவருக்கு தேவையான பணம் கிடைத்துவிட்டது. ஆனால் அந்த பெண் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பெற்ற குழந்தையை நடுரோட்டில் விற்பனை செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவரை மன்னித்து வழக்கில் இருந்து விடுதலை செய்யும்படி பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply