சுப்பிரமணியன் சுவாமி ஜோக்கர் அல்ல. அவர் ஒரு ஆபத்தான புத்திசாலி. வைகோ

vaiko and swamyபிரபல வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜெயலலிதா மற்றும் சுப்பிரமணியன் சுவாமி குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்திற்கு நீதி கிடைத்தது என்று கூறினார்.

சுப்பிரமணியன் சுவாமி குறித்து கூறும்போது, எல்லோரும் நினைப்பதுபோல் அவர் ஜோக்கர் அல்ல. நல்ல புத்திசாலி. ஆனால் அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தை கிரிமினலுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறார். அவர் ஒரு ராஜபக்சேவின் ஏஜண்ட்.

ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் இன்றைய சூழ்நிலையில் ஜெயலலிதாதான் ஆட்சியை பிடிப்பார். அவர் மீது மக்களிடம் ஒரு அனுதாபம் இருப்பதை பார்த்து வருகிறேன்.

அதே நேரத்தில் ஒ.பன்னீர்செல்வம் அடிமட்ட தொண்டராக இருந்து வந்தவர் என்பதால் அவருக்கு தொண்டர்களின் மனநிலை நன்கு தெரியும். அவரை ஒன்றும் அறியாதவர் என்று யாரும் கொச்சைப்படுத்த வேண்டாம்.

Leave a Reply