மரணத்திற்கு முன்பு 10 வயது சிறுமி செய்த மகத்தான் செயல். இங்கிலாந்து பெற்றோர் ஆச்சரியம்.

cancer girlஇங்கிலாந்து நாட்டை சேர்ந்த பத்து வயது சிறுமி ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். ஆனால் அவருடைய பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் தற்போது அவர் அனுப்பிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களும் பரிசுகளும் கிடைத்துள்ளன. மரணம் அடைவதற்கு முன்பே அவர் ஆன்லைனில் தனது பெற்றோர்களுக்காக அவர் ஆர்டர் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த Chelmsford என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி லில்லி. இவருக்கு DIPG என்ற அரியவகை புற்றுநோய் இருப்பதை சமீபத்தில் இவருடைய பெற்றோர் கண்டுபிடித்து அதற்குரிய சிகிச்சை கொடுத்து வந்தார். ஆனால் புற்றுநோய் குணமாக முடியாத நிலைக்கு சென்றுவிட்டதால் இவருடைய மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

தனது மரணத்தை அறிந்துகொண்ட லில்லி, தான் மரணம் அடைவதற்கு முன்னர் தனது தாய் தந்தைக்கும், உறவினர்களுக்கும் கிறிஸ்துமஸ் பரிசை சஸ்பென்ஸாக கொடுக்க முடிவு செய்தார். எனவே லில்லி தனது தந்தையின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் தனது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசு பொருட்களை வாங்கி அவற்றை கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய வாரம் டெலிவரி செய்யும்படி ஆர்டர் செய்துள்ளார்.

கடந்த மாதமே லில்லி மரணம் அடைந்துவிட்டார். ஆனால் அவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த கிறிஸ்துமஸ் பரிசுகள் நேற்று அவரது பெற்றொர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டது. அந்த பரிசுப்பொருட்களை பார்த்தவுடன் சோகத்தை அடக்க முடியாமல் லில்லியின் பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்த காட்சி காண்போரை கலங்க வைப்பதாக இருந்தது என அவரது உறவினர்கள் கருத்து தெரிவித்தனர்.

Leave a Reply