ஷங்கரின் ‘ஐ’ டிரைலர் ஏற்படுத்திய பரபரப்பு. அஜீத் படக்குழுவினர் அதிர்ச்சி?

ajith and shankarஷங்கர் இயக்கிய ‘ஐ’ என்ற பிரமாண்ட திரைப்படத்தின் டிரைலர் நேற்று இரவு 10 மணிக்கு யூடியூபில் வெளிவந்தது. சரியாக 13 மணி நேரத்தில் யூடியூபில் 7 லட்சம் பார்வையாளர்கள் வந்துள்ளனர். இதனால் படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளது.

பொங்கல் தினத்தில் அஜீத் படத்துடன் மோத இருப்பதால் எதிர்ப்பார்ப்பை பல மடங்கு உயர்த்தினால்தான் படத்தை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்று முடிவு செய்த ஷங்கர் டிரைலர் வெளியீட்டை திடீரென நேற்று அறிவித்துவிட்டார். முன்னதாக டிசம்பர் 24ஆம் தேதிதான் டிரைலரை வெளியிட அவர் முடிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 25ல் ‘என்னை அறிந்தால்’ டிரைலர் வெளியாகவுள்ளதால் ஷங்கர் திடீரென டிரைலர் தேதியை மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

ஷங்கருக்கும் அஜீத்துக்கும் நடைபெற்று வரும் கடும்போட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்தியின் கொம்பனும், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டையும் பொங்கல் ரேஸில் இருந்து ஒதுங்கிக்கொள்ள முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முன்வைத்த காலை பின்வைக்க விஷால் விரும்பவில்லை. அவருடைய ‘ஆம்பள’ பொங்கலுக்கு ரிலீசாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷங்கரின் ‘ஐ’ டிரைலர்பட்டையை கிளப்பி வருவதால் அஜீத் படத்தின் டீசரும் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ஒருசிலர் கூறி வருகின்றனர்.இன்று அல்லது நாளை திடீரென ‘என்னை அறிந்தால்’ டிரை’aiலரை வெளியிட கவுதம் மேனன் தரப்பு ஆலோசனை செய்து வருகின்றனர்.

ஒருவேளை அஜீத் படத்தின் டிரைலர் இந்த இரண்டு நாட்களுக்குள் வெளிவந்தால், ஷங்கரின் ‘ஐ’ படத்தின் மற்றொரு டிரைலர் கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. டீசர் முதல் பட வெளியீடு வரை இரு படங்களும் போட்டு போட்டுக்கொண்டு செயல்படுவது ரசிகர்களுக்குத்தான் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply