காகித ரூபாய்களுக்கு பதிலாக இ-ரூபாய். கிறிஸ்துவ பாதிரியார் யோசனை.

e rupeeகாங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய எந்த ஆட்சியாக இருந்தாலும் கருப்புப் பண விவகாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கருப்புப்பணத்தை கட்டுப்படுத்த இ-ரூபாய் அறிமுகப்படுத்த வேண்டும் என கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் யோசனை தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க பாதிரியாரான ஆப்பிரஹாம் முலாமூட்டில் தனது எண்ணத்தை வெறும் ஆலோசனையாக தெரிவிப்பது மட்டுமின்றி அந்த ஆலோசனைகளை  புத்தக வடிவிலும் கொடுத்துள்ளார்.

‘E-rupee to Reinvent India’ என்ற பெயரில் அவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாளை கேரளாவில் வெளியிடுகிறார். நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் குரியன் அவர்கள் தலைமை வகிக்க உள்ளார்.

இப்புத்தகம் தொடர்பாக பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த பாதிரியார், “இ-ரூபாய் அறிமுகம் செய்வதன்மூலம் கருப்புப் பணத்தை கட்டுப்படுத்த முடியும். ஏனெனில், இ-ரூபாய் பயன்படுத்தும்போது அனைத்து பண பரிவர்த்தனைகளும், கட்டண சேவைகளும் கண்காணிக்கப்படும். ஊழலையும் தடுக்க முடியும். காகிதத்தால் ஆன பணத்தை பயன்படுத்தாத ஒரு சமூகம் உருவாகும் என்றார்.

Leave a Reply