தில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அரசு நிறுவனமான “நேஷனல் கிரீன்ட்ரிப்யூனல்” எனும் பசுமைத் தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 51
பணி:
1. ப்ரைவேட் செக்ரட்டரி
2. அசிஸ்டென்ட்
3. லைப்ரரியன்
4. ஸ்டெனோ
5. பியூன், ஆர்டர்லி, கோர்ட் அட்டண்டன்ட் என ஐந்து பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தகுதி: முதல் நான்கு பணியிடங்களுக்கு அந்தந்த துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐந்தாவது பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது துறை சார்ந்த பிரிவில் ஐடிஐ, டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.12.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.greentribunal.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.