பெஷாவர் ராணுவப்பள்ளியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக 2 தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு நேற்று இரவு தூக்கிலிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 132 பள்ளிக் குழந்தைகளை தலிபான் தீவிரவாதிகள் படுகொலை செய்த பயங்கர சம்பவம் பாகிஸ்தான் அரசை அதிர வைத்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று இரவு முக்கிய 2 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர்!!
அதுமட்டுமின்றி மேலும் சிலருக்கு விரைவில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப் தனக்கு வந்த தீவிரவாதிகளின் கருணை மனுக்களை அடுத்தடுத்து தள்ளுபடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
நவாஸ் ஷெரிப்பை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தளபதியும் 48 மணிநேரத்துக்குள் 3 ஆயிரம் தீவிரவாதிகளை தூக்கிலிட வேண்டும் என்று முழங்கியுள்ளார். தற்போது பாகிஸ்தான் சிறைகளில் மொத்தம் 8 ஆயிரம் மரண தண்டனை கைதிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.