நெத்திலிக் குழம்பு

Smelts Fish Curry-jpg-1092

நெத்திலிக் குழம்பை நேசிக்காத அசைவப் பிரியர்களே இருக்க முடியாது. எளிதாக சமைத்து ருசியாகச் சாப்பிட ஏற்றது நெத்திலி மீன். சமைச்சு சாப்பிட்டு பாருங்க.. சும்மா கும்முன்னு இருக்கும். என்னங்க எங்க கௌம்பிட்டீங்க… நெத்திலி குழம்பு வைக்கதானே……

தேவையான பொருட்கள்:

நெத்திலி மீன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – ஒரு கை அளவு
தக்காளி – 3
மஞ்சள் தூள் – 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீ ஸ்பூன்
தனியா தூள் – 3 டீ ஸ்பூன்
புளி – ஒரு எலுமிச்சை அளவு
எண்ணை – ஒரு குழிக்கரண்டி
கடுகு – ஒரு டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
வெந்தயம் – ஒரு டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

* நெத்திலியை சுத்தம் செஞ்சுக்குங்க. எண்ணைய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் ஆகியவற்றை தாளிக்கவும்.

* வெங்காயத்தை பொன் முறுவலா வதக்கிட்டு, தக்காளியையும் போட்டு வதக்கணும்.

* பிறகு புளியைத் தேவையான அளவு தண்ணியில் கரைச்சு ஊத்தி, உப்பு போடுங்க.

* குழம்பு நல்லாக் கொதிக்கிறப்போ, கழுவி வச்ச நெத்திலி மீன்களைப் போட்டு, மீன்ல குழம்பு சேர்ந்ததும் இறக்கிடுங்க.

* காலைல வச்ச குழம்பை ராத்திரி சாப்பாட்டுக்கு சாப்பிட்டுப் பாருங்க. உலகத்தையே எழுதித் தருவீங்க.

Leave a Reply