வலி நிவாரணிகளில் போதைப்பொருள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் !!

Pain-Relievers-drugs-study-bombshe

கனடாவில் வலி நிவாரண மாத்திரைகள் உயிரைக் கொல்லும் பொருளாக மாறி வருவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகம் வலி நிவாரணிகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து மருந்தியல் துறை பேராசிரியர் நிக்கோலஸ் தனது குழுவினருடன் சேர்ந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.

இதுகுறித்து நிக்கோலஸ் கூறுகையில், கடந்த இருபது ஆண்டுகளில் வலி நிவாரணிகளால் அமெரிக்கா மற்றும் கனடாவில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதற்கு காரணம் , வலி நிவாரணிகளில் நோயாளிகளுக்கு வலியைக் குறைக்க அளிக்கப் படும் வலிநிவாரணிகளில் ஹெராயின் மற்றும் கோகைன் ஆகிய இரண்டு போதை மருந்துகள் கலந்துள்ளது.

நீண்ட காலம் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உடல்நிலை பாதிப்படைவதாகவும், அதுவே காலப்போக்கில் உயிர்க்கொல்லிகளாக மாறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இது போன்ற போதை மருந்து கலந்த வலி நிவாரணிகளை சாப்பிட்டு பலியாவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், கனடா இரண்டாம் இடத்தில் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கின்றது.

தற்போதைய இந்த ஆய்வு முடிவை மற்ற நாடுகள் எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நல்லது என நிக்கோலஸ் கூறியுள்ளார்.

Leave a Reply