ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ‘முக்கிய திருவிழா நேரங்களில் நேரடி தெலுங்கு படம் மட்டுமே ரிலீஸ் செய்யவேண்டும், அந்த நேரத்தில் டப்பிங் படங்களின் ரிலீஸுக்கு அனுமதி கிடையாது என்று ஏற்கனவே பிலிம் சேம்பர் ஒரு விதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சங்கராந்தி திருவிழாவை ஒட்டி ‘ஐ’ ரிலீஸ் ஆவதை தடை செய்ய வேண்டும் என்று பிலிம் சேம்பரில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு ‘ஐ’ படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் உரிமங்களை பெற்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரும் சங்கராந்தி தினத்தில் தெலுங்கில் வெங்கடேஷ், பவன்கல்யாண் நடித்த ‘கோபாலா கோபாலா’ மட்டுமே ரிலீஸ் ஆவதாகவும், அதுவும் கோபாலா கோபாலா’ ரிலீஸ் ஆனபின்னர் 5 நாட்கள் கழித்தே ‘ஐ’ ரிலீஸ் ஆக உள்ளதாகவும், எனவே இந்த படத்திற்கு தடை விதிக்க கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே ஜூனியர் என்.டி.ஆரின் ‘டெம்பர் மற்றும் அனுஷ்காவின் ‘ருத்ரம்மாதேவி’ ஆகிய படங்கள் சங்கராந்திக்கு ரிலீஸ் ஆகாது என்று அறிவித்துவிட்டதால் ‘ஐ’ படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். பிலிம் சேம்பர் என்ன முடிவு எடுக்கவுள்ளது என்பதை டோலிவுட் பரபரப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது.