காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

Panner Peas Cauliflower Masala-jpg-1189

வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம்… அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க….!

தேவையான பொருட்கள்:

மசாலா அரைத்துக்கொள்ள:

வெங்காயம் – 2
பேல் பூரி – 1
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 5
மஞ்சள் பொடி – 1 சிட்டிகை

செய்முறை:

* வெங்காயம், பேல் பூரி, மிளகாய்த்தூள், பச்சைமிளகாய், மஞ்சள்பொடி ஆகியவற்றை சுடுநீரில் ஊற வைத்து, கெட்டிவிழுதாக, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* காலிப்ளவர் பெரிய துண்டுகளாக, சுத்தப்படுத்தி, உரித்த பட்டாணி 2 கப் சேர்த்து, தண்ணீரில் இரண்டையும் கொதிக்க விடவும்.

* வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணை வைத்து சூடானதும், ஒரு துண்டு பட்டை புளி, கிராம்பு, 1 ஸ்பூன் சோம்பு பொரித்து, அத்துடன் அரைத்த மசாலா விழுது சேர்த்து, தணிந்த தீயில் எண்ணை பிரிந்து வரும் வரை வதக்கவும்.

* பிறகு கொதிக்க வைத்த காலிப்ளவர், பட்டாணி சேர்த்து, உப்பு, 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

* தக்காளி சாஸ் அரை கப், கலந்து, சில நிமிடம் கிளறியதும் கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி, சூடாக பரிமாறவும்.

* பட்டாணி சேர்த்த பின் பனீர் துண்டுகளும் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

* இந்த மசாலா எல்லா வகை சாதம், டிபன் வகைகளுக்கும் மிகவும் நன்றாக இருக்கும்.

Leave a Reply