புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதேசி. வைணவ கோவில்களில் சிறப்பு ஏற்பாடு

sorka vasalஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதி, வைகுண்ட ஏகாதசியும் இணைந்து வருவதால் திருப்பதி உள்பட வைணவத் திருத்தலங்களில் பரமபத வாசல் புத்தாண்டு அன்றே திறக்கப்படுகிறது.

வைணவர்களின் முக்கிய விழாக்களில் ஒன்றா வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவையொட்டி வைணவத் திருத்தலங்களில் நள்ளிரவு முதலே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதைத் தொடர்ந்து, பரமபத வாசல் என்று கூறப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை ரங்கநாதப் பெருமாள் கோயில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்ட வைணவக் கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, புத்தாண்டு தினத்தில் வைகுண்ட ஏகாதசி வருவதால் பக்தர்கள் கூட்டம் அலை மோதும் எனத் தெரிகிறது.

வைகுண்ட ஏகாதேசி அன்று திருப்பதியில் அதிகளவிலான கூட்டம் கூடும் என்பதால் அங்கு சிறப்பு பாதுகாப்பு போடப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Reply