உலகின் மெல்லிய போன் இங்கேயும் அறிமுகம்

slim_2251161f

உலகின் மெலிதான ஸ்மார்ட் போன் எனும் அடைமொழியைப் பெற ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்கள் எப்போதுமே போட்டி போடுகின்றன. இந்தப் பட்டத்தைக் கைப்பற்றுவதற்குப் புதிய வரவான விவோ எக்ஸ் 5 மேக்ஸ் சீனாவில் அறிமுகமான வேகத்தில் இந்திய சந்தையிலும் அறிமுகமாகியிருக்கிறது.

4.75 மி.மீ. அளவு தட்டையான இந்த ஸ்மார்ட் போன், 4.85 மி.மீ அளவு தட்டையாக அறிமுகமான ஒப்போ ஆர்5 போனை மிஞ்சியிருக்கிறது. மிகவும் மெலிதான ஸ்மார்ட் போன் உடலை (சேசிஸ்) கொண்டு இந்த போனை உருவாக்கியிருப்பதாக விவோ தெரிவித்துள்ளது. 5.5 இஞ்ச் எச்.டி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 16 ஜிபி ஸ்டோரேஜ். 128 ஜி.பி. வரை அதகரிக்கும் வசதி இருக்கிறது.

13 மெகாபிக்சல், 5 மெகாபிக்சல் முன்பக்க மற்றும் பின்பக்க காமிரா, மைக்ரோ மற்றும் நானோ சிம் உள்ளிட்ட இரட்டை சிம் வசதி பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ரூ.32,980. விற்பனைக்குக் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒல்லி போன் தவிர ஒய் 15 ரூ.8,000 விலையிலும் ஒய் 22 ரூ.10,000 விலையிலும் அறிமுகம் செய்யப்படுகின்றன.

Leave a Reply