உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வீரர்கள், தங்களது காதலியை உடன் அழைத்து செல்லக்கூடாது என இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ அதிரடியாக தடை விதித்துள்ளது.
தற்போது, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய வீரர்கள் தங்கள் மனைவியை மட்டும் உடன் அழைத்து செல்லலாம் என்றும் வீரர்கள் தங்களது காதலியை அழைத்து செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதே விதி வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் தொடரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் திருமணம் ஆகாத இந்திய வீரர்கள் தங்கள் காதலிகளை சுமார் நான்கு மாதங்கள் பிரிந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த புதிய விதி இந்திய துணை கேப்டன் விராட் கோலிக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளதாக கூறப்படுகிறது. விராட் கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, கோலியுடன் சுமார் நான்கு மாத காலம் பிரிந்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் இருவரும் வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட்கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவை இங்கிலாந்துக்கு அழைத்து கொண்டு சுற்றியதால்தான் அவரது பேட்டிங் பாதிக்கப்பட்டதாக கடுமையான விமர்சனம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.