“நான் ஏன் காந்தியைக் கொன்றேன்? கோட்சே எழுதிய நூல் மறுபதிப்பு.

godseதேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்ஸேவின் வாக்குமூலங்கள் அடங்கிய புத்தகம் ஆங்கிலத்தில் மீண்டும் மறுபதிப்பு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நாதுராம் கோட்சேவின் சகோதரர் கோபால் கோட்சே  மராத்திய மொழியில் எழுதிய “நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?’ என்ற தலைப்பிலான நூல்  1970-ஆம் ஆண்டு இந்தியிலும், 1993-ஆம் ஆண்டு ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.

காந்தியை சுட்டுக்கொன்ற பின்னர் கைது செய்யப்பட்ட நாதுராம் கோட்சே, போலீஸாரிடம் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு விசாரணைகள், முக்கியப் புகைப்படங்கள் மற்றும் அபூர்வ தகவல்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பை மறுபதிப்பு செய்ய டில்லியில் உள்ள ஃபார்ûஸட் வெளியீட்டாளர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான முறையான அனுமதியை இந்த நூலின் முந்தைய பதிப்பாளரிடமிருந்து அந்நிறுவனம் பெற்றுள்ளது.

208 பக்கங்கள் கொண்டதாக உருவாக்கப்படும் இந்தப் புதிய நூல், அதன் முந்தைய பதிப்பினைக் காட்டிலும் கூடுதல் தகவல்களைக் கொண்டிருப்பதாக ஃபார்ûஸட் நிறுவன உரிமையாளர் விஜய் கோயல் தெரிவித்தார். இந்த மறுபதிப்பு நூல் விரைவில் வெளிவரவுள்ளது.

Leave a Reply