திருப்பதி திருமலையில், லட்டு டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து மோசடி செய்த ஒப்பந்த ஊழியர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இது குறித்து, திருமலை போலீசார் கூறியபோது, . திருமலையில் லட்டு வழங்கும் இடத்தில், ஒப்பந்த ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று திருமலையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை செய்தபோது லட்டு டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து லட்டு டோக்கன்களுக்கு இடையே விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
லட்டு டோக்கன்களை சோதனை செய்த விஜிலென்ஸ் அதிகாரிகள், தேவஸ்தானம் வழங்கிய லட்டு டோக்கன்களை காட்டிலும், அதிக டோக்கன்கள் விநியோகம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து, தேவஸ்தான ஊழியர்கள் திருமலை போலீசாருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை தேடிவருவதாக திருமலை முதலாம் காவல் நிலைய போலீசார் தெரிவித்தனர்