சமீபத்தில் நடைபெற்ற ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஜார்கண்ட்டின் புதிய முதல்வராக ரகுபார் தாஸ் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் பழங்குடி இனத்தவர்கள் இருக்கின்றனர். இதனால் இதுவரை முதல்வராக இருந்த பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா, சிபு சோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் ஆகிய ஐவருமே பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல்முறையாக பழங்குடி இனத்தை அல்லாத ஒருவர் ஜார்க்கண்ட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தலைநகர் ராஞ்சியில் இன்று நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ரகுபார் தாஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
59 வயதாகும் ரகுபர் தாஸ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஆனந்த்பிகாரி துபேய்யை 70,157 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.