இதய நோய், பக்கவாத தாக்கத்தை குறைக்க முடியும் : ஆய்வில் தகவல் !!

hea

தினமும் 6 மணி முதல் 8 மணி நேரம் தூங்கினால் இதய பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும் என்பது ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

இறைவன் தினமும் நமக்கு கொடுத்துள்ள 24 மணி நேரத்தில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பிற பணிகள், அடுத்த 8 மணி நேரம் தூங்கினால் உடல் நலன் காக்கப்படும் என்பது பொதுவான கருத்தாகும் சமீபத்தில் நடந்த புதிய ஆய்வில், ஆறு முதல் எட்டு மணி நேரம் தினமும் தூங்கினால் இதய பிரச்னைகள் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தை குறைக்க முடியும் என தெரியவந்துள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில், ஆறு மணி நேரத்திற்க்கு குறைவாக துங்குபவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாத நோய்களின் தாக்கம் இருமடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

தூக்கமின்மை, இதயத்தின் திறனை குறைத்து விடும் என்பதுடன், உடலுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை குறைத்து விடும். இது குறித்து அமெரிக்க பத்திரிகையான “மருத்துவ கார்டியாலஜி ஆன்லைன்” வெளியிடப்பட்டுள்ள ஆய்வு முடிவுகளில், ஐந்து வெவ்வேறு இதய பிரச்னைகள் தொடர்பாக விளக்கங்களை தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளது.

சிகாகோ மருத்துவ பள்ளி ஆசிரியர், டாக்டர் சவுரப் அகர்வால் கருத்துப்படி. ‘தினமும் ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கத்துக்கான சிறந்த நேரமாகும்’ என்று கூறியுள்ளார்.

‘பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் அறிக்கையின் படி, 2011ல் பிரிட்டனில் 1,59,000 மக்கள், இருதய நோயால் இறந்துள்ளனர். இதில், ஆறில் ஒரு ஆணும், ஒன்பதில் ஒரு பெணுனும் கரோனரி இதய நோயால் இறந்துள்ளனர்.

மேலும் பக்கவாத்தால் 42,000 பேர் இறந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply