காஷ்மீரில் திடீர் திருப்பம். மக்கள் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைக்கும் உமர் அப்துல்லா.

kashmirநடந்து முடிந்த காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத சூழ்நிலையில் அங்கு ஆட்சி அமைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

முதல்வர் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கும் என்ற கருத்து நிலவி வந்த வேளையில் திடீர் திருப்பமாக பாஜகவுடன் கூட்டணி ஆட்சி குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என உமர் அப்துல்லா தெரிவித்துளார்.

இந்நிலையில் காஷ்மீரில் 28 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருக்கும் மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க தேசிய மாநாட்டு கட்சி முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்தன. இதனால் இந்த கட்சிகளின் பலம் 43 ஆகிறது. அத்துடன் 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் இந்த புதிய கூட்டணியை ஆதரிக்க முன் வந்துள்ளனர். இதனால் 87 இடங்களை கொண்ட காஷ்மீர் சட்டசபையில் பெரும்பான்மை கிடைத்துவிடும் என்றும், இந்த கூட்டணி விரைவில் ஆட்சி அமைக்கும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply