இலங்கையில் வரும் ஜனவரி 25ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பொது வேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிரச்சாரம் செய்வதற்காக இலங்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ராஜபக்சே சிறப்பான வரவேற்பு அளித்துள்ளார். சல்மான்கானுடன் பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உடன் சென்றுள்ளார். இவர் சல்மானுடன் கிக் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜாக்குலினின் சொந்த நாடு இலங்கை என்பது அனைவரும் அறிந்ததே.
சல்மான்கானின் திரைப்படங்கள் அனைத்தும் இலங்கையில் நல்ல வசூலை கொடுத்து வருகின்றன. இலங்கை மக்களின் மத்தியில் சல்மான்கான் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் அவர்களின் வாக்குகளை கவர்வதற்காகவே சல்மான்கான் பிரச்சாரம் செய்ய அழைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.