ஒபாமாவின் வழியில் கராச்சிக்குள் புகுந்து தாவூத் இப்ராஹிமை கைது செய்ய வேண்டும். சிவசேனா

modi and dawoodஅமெரிக்காவின் அதிரடிப்படை பாகிஸ்தானின் அபோதாபாத் நகருக்குள் புகுந்து பின்லேடனை வேட்டையாடியது போல கராச்சி நகரில் ஒளிந்து கொண்டிருக்கும் தாவூத் இப்ராஹிமை இந்திய அரசு கைது செய்யுமா? என்று சிவசேனா கேள்வி எழுப்பியுள்ளது.

மும்பை வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் தங்கியிருப்பதாக newsmobile.in என்ற இணையதளம் ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் எப்பொழுதும்போல தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என்று கூறிவருகிறது.

இந்நிலையில் அமெரிக்க படை போலவே இந்திய படையும் கராச்சி நகருக்குள் புகுந்து தாவூத் இப்ராஹிமை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது. இந்த கருத்தை சிவசேனா தனது அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னா மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply